இபிஎஸுக்கு இயக்குநர் நவீன் கேள்வி

by Staff / 16-02-2023 03:24:31pm
இபிஎஸுக்கு இயக்குநர் நவீன் கேள்வி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இபிஎஸ், ஆண்கள்தான் வீரமானவர்கள் என்பது போல பேசி இருந்தார். இதனை சுட்டிக்காட்டிய இயக்குநர் நவீன், ‘ஆண்களாக இருப்பதற்கும், வீரத்திற்கும் என்ன தொடர்பு? உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆணா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆணா? இன்னும் எத்தனை காலம் ஸ்டீரியோடைப் வசனம் பேசுவீர்கள்? இது பெண்களை இழிவுப்படுத்தும் செயல்’ என கூறினார்.

 

Tags :

Share via