ஹைதராபாத்தில் தமிழக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 26-03-2024 02:05:51pm
ஹைதராபாத்தில் தமிழக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியில் உள்ள விடுதி அறையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த கிரண்குமார் (26) வனஸ்தலிபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று(மார்ச்26) தனது விடுதி அறைக்குள் சென்ற அவர் வெளியே வரவில்லை. விடுதி உரிமையாளர் ஜன்னல் வழியாக பார்த்தபோது கிரண்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories