மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு நாகர்கோவில் வாலிபரிடம் எஸ்.பி.ஹரிகிரன் பிரசாத் விசாரணை

by Editor / 21-11-2022 12:10:06pm
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு நாகர்கோவில் வாலிபரிடம் எஸ்.பி.ஹரிகிரன் பிரசாத்  விசாரணை

 கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இவரது தொலைபேசி எண் மங்களூர் குக்கர் வெடிகுண்டு வெடித்து காயமடைந்த ஒருவரின் தொலைபேசிக்கு சென்றுள்ளதை தொடர்ந்து அஜிம் ரகுமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் காரனாக போலீசாரும் நாகர்கோவிலுக்கு விரைந்துள்ளனர்.என்.ஐ.ஏ.விஸ்சரணை நடத்திட வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

 

Tags :

Share via

More stories