ரூ.648 கோடி சொத்துமதிப்பு கொண்டஆற்றல் அசோக் குமார் அதிமுக வேட்பாளர்

by Staff / 26-03-2024 01:57:53pm
ரூ.648 கோடி சொத்துமதிப்பு கொண்டஆற்றல் அசோக் குமார் அதிமுக வேட்பாளர்

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவரும் நிலையில் அவர்களின் சொத்துமதிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் ஆற்றல் அசோக் குமாருக்கு ரூ.648 கோடி அளவிலான சொத்துகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரது பெயரில் ரூ.526.53 கோடி அசையும் சொத்துகள், ரூ.56 கோடி அசையா சொத்துகள், அவரது மனைவி பெயரில்,ரூ.47 கோடி அசையும், ரூ.22 கோடி அசையா சொத்துகள் இருக்கின்றன. இவர் பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via