குப்பையை தரம் பிரித்து பெற கூட்டத்தில் மேயர் அறிவுரை

by Staff / 30-04-2023 01:51:08pm
குப்பையை தரம் பிரித்து பெற கூட்டத்தில் மேயர் அறிவுரை

சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், மேயர் பிரியா பேசியதாவது: வீடுகளில் பயன்படுத்தப்படும், சானிட்டரி நாப்கின், 'டயப்பர்' கழிவுகளை, துாய்மை பணியாளர்களிடம், பொதுமக்கள் தனியாக வழங்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்பதுடன், சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, அதிகளவில் குப்பை கொட்டும் இடங்களில், குப்பை சிதறுவதை தவிர்க்க, அங்கு தேவையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். அதேபோல், வீடுகளில் இருந்தே, மட்கும், மட்காத குப்பையை தரம் பிரித்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via

More stories