தமிழக அரசுக்கு எதிராக வணிகர்களை ஒன்று திரட்டி நாளை கடையடைப்பு போராட்டம் .
பழனியில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வணிகர்களை ஒன்று திரட்டி நாளை கடையடைப்பு போராட்டம் ஆளுங் கட்சியினருக்கு எதிராக பழனி கோவில் நிர்வாகம் சார்பில் நாளை தொடர்ந்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி தேவஸ்தானம் சார்பில் கிரிவீதி பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி தேவஸ்தானத்தை கண்டித்து நாளை பழனி நகராட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது இதற்கு திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இருக்கா வண்ணம் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அன்னதானம் ஏற்பாடு செய்திருப்பது பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : தமிழக அரசுக்கு எதிராக வணிகர்களை ஒன்று திரட்டி நாளை கடையடைப்பு போராட்டம் .


















.jpg)
