ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

by Editor / 30-12-2022 09:50:24pm
ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

பரமக்குடி - சத்திரக்குடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம் மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.00 மணிக்கு புறப்படும். பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தற்போது ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்கு புறப்படும்.

 

Tags :

Share via