ஆந்திராவில் நடிகை ரோஜா பதவி பறிப்பு

by Editor / 18-07-2021 11:30:58am
ஆந்திராவில் நடிகை ரோஜா பதவி பறிப்பு

ந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரோஜாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்த முதல்வர் ஜெகன் மோகன், எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிக்கள் அனைத்தையும் பறித்துள்ளார்.

அதில், எம்எல்ஏ ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo