மேகதாது அணை பிரச்சனை தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி பயணம்

by Editor / 22-06-2022 11:31:56am
மேகதாது அணை பிரச்சனை தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி பயணம்

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி சென்று உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சென்ற குழுவினர் இன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து அணை பிரச்சனை தொடர்பாக விவாதிக்கின்றனர். இதற்கு இடையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியானதும் பிரதமர் மோடிக்கு மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில் இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் அதன் மீதான முடிவுகள் வெளியாகும் வரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதுபற்றி விவாதிக்க கூடாது என்றும் இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அறிவுரை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via
Logo