விடுதியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

by Staff / 19-09-2023 12:30:04pm
விடுதியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி. எஸ். சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் வார்டனிடம் கூறினர். அவர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு ஜனனி தற்கொலை செய்து செய்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via