ரஷ்யா -உக்ரைன் இரு நாடுகளும் 157 கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன.
ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. இரு நாடுகளும் 157 கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன. .இதில் ராணுவ வீரர்கள் மற்றும் இன்றி சில பொதுமக்களும் அடங்குவர் .இது கடந்த ஐந்து மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் ஆகும். இந்தப் பேச்சு வார்த்தைகள் அமெரிக்காவின் மத்தியஸ்டத்தில் டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு தூதர் முன்னிலையில் நடைபெற்றது. போர் நிறுத்தம் எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் போரை முடிவுக்கு கொள்வதற்கான இறுதி தீர்வு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை முடிந்தது பேச்சு வார்த்தைகள் ஆக்கபூர்வமாக இருந்ததாக இருதரப்பு தெரிவித்துள்ளன. அடுத்த சுற்று பேச்சு வார்த்தைகள் வரும் வாரங்களில் அனேகமாக அமெரிக்காவில் நடைபெற கூடும் எனஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தைக்கு அரபு எமிரேட் அமைச்சகம் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து செயல்படுவதற்கு ஒத்துழைப்பான சூழல் உருவாகி வருவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளது.
Tags :

















