இந்தியாவுடன் தனது எரிசக்தி ஒத்துழைப்பு சீராக தொடர்வதாக ரஷ்யாவும் கூறியுள்ளது

by Admin / 06-02-2026 03:34:51am
இந்தியாவுடன் தனது எரிசக்தி ஒத்துழைப்பு சீராக தொடர்வதாக  ரஷ்யாவும் கூறியுள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தம் வேண்டுகோளை ஏற்று இந்தியா ரஷ்யாவிடம் இருந்து  எண்ணெய்இறக்குமதியை குறைத்துள்ளதாக தெரிவித்ததற்கு ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது தொடர்பான செய்திகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளது. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை அரசின் மிக முக்கியமான முன்னுரிமை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் முடிவுகள் முற்றிலும் தேசிய நலன் மற்றும் சந்தை யதார்த்தங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன அவை வெளிநாட்டு அழுத்தங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளில் இருந்து எரிசக்தியை பெறுவதே இந்தியாவின் உத்தியாக உள்ளது இதற்காக அமெரிக்கா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிடமிருந்து என்னை வாங்குவதற்கான வாய்ப்புகளையும் இந்தியா பரிசு அளித்து வருகிறது அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து ரஷ்ய என்னை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக அதிபர் சமூக ஊடங்களில் பதிவிட்டிருந்தார் இருப்பின் அத்தகைய உறுதியான வாக்குறுதிகள் எதையும் இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை . ரஷ்யாவும் இக்கூற்றுக்களை நிராகரித்து உள்ளதுடன் இந்தியாவுடன் தனது எரிசக்தி ஒத்துழைப்பு சீராக தொடர்வதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via