நான்கு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டமதப் போதகர் ஆபிரகாமுக்கு தூக்குத்தண்டனை- திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றம்

by Admin / 20-08-2026 01:17:48pm
 நான்கு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டமதப் போதகர் ஆபிரகாமுக்கு தூக்குத்தண்டனை- திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றம்

இன்று திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தேவர்குளம் மேல இழந்தை பகுதியில் உள்ள மதப் போதகர் ஆபிரகாம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையின் போது ஒழுக்க நெறி வகுப்புக்கள் மற்றும் பிரார்த்தனை எடுப்பதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உள்பட நான்கு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கள் பெற்றோர்களிடம் அவர்கள் கூறியதை அடுத்து தேவர் குலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஜூலை5, 2022 ஆம் ஆண்டு ஆபிரகாம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட மதபோதகர் ஆபிரகமுக்கு சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்ற மரண தண்டனையை விதித்து தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட நாள் சிறுமிகளுக்கும் அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo