தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும்
அரசு முறை பயணமாக இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் பங்கேற்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த முதலமைச்ருக்குச கே .டி .சி நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை சென்றடைந்த முதலமைச்சர் இன்று மாலை பாளையங்கோட்டை டக்கரம்மாள் புரத்தில் நடைபெறுகிற பிரம்மாண்ட கிறிஸ்மஸ் பெருவிழாவில் கலந்து கொள்கிறார். அதனோடு செட்டியார் பட்டி மலைப்பகுதியில் 62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொருணை அருங் காட்சியகத்தையும் திறந்து வைக்கிறார். அத்துடன் 639 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். நாளை காலை, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
Tags :













.jpg)





