வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.

by Editor / 31-08-2024 07:41:08pm
வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழி பாலம் பகுதியில் உள்ள பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காட்டு யானை ஒன்று தேயிலை தோட்டத்திலிருந்து வெளியேறி சாலையில் உலா வந்தது. இந்த யானை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சாலையில் உள்ள மக்களை விரட்டியதால் பொதுமக்கள் அங்கும் இங்கும் சிதறி  ஓடினர் .கல்லூரி இன்று பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டதால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.சாலையில் மக்களை விரட்டியை காட்டுயானை தானாக வணப்பகுதிக்கு சென்றதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

 

Tags : வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.

Share via

More stories

Logo