சந்திரயான் 3 - மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது

by Staff / 23-08-2023 02:23:13pm
சந்திரயான் 3 - மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த செயல்பாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தால் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 4வது இடத்தை பெறும். இதையொட்டி நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டரை இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via