வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் மீதான வழக்குகள் - நீதிபதி வேதனை

by Staff / 23-08-2023 02:16:38pm
 வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் மீதான வழக்குகள் - நீதிபதி வேதனை

தி.மு.க.அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி  தெரிவித்துள்ளார்

 நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும்  நீதிமன்றம்உரித்தானது . யார் ஆட்சிக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர். இன்று அமைச்சர்கள் மீதான வழக்கில்  வேதனை அடைந்ததாக தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறை  செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories