விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

புனேவில் இருந்து டெல்லி செல்லும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, தனது பைக்குள் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவ் அஜய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜய் சத்தமிட்டதையடுத்து மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு இருப்பதாக கூறியது புரளி எனவும், கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஜய் சத்தமிட்டதால், விமானத்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :