விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பு.. சபாநாயகர்

by Staff / 25-02-2024 02:21:43pm
விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பு.. சபாநாயகர்

தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றுக் கட்சியினரைச் சேர்ந்தவர்களை பாஜகவில் இணைக்க அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதாரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் ராஜினாமா செய்தார். ராஜினாமா ஏற்கப்பட்டதால் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக விரைவில் அறிவிக்கப்படும். இந்நிலையில் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo