பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்

by Admin / 10-03-2022 05:08:01pm
 பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
 
பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, மக்களின் இதயங்களை வென்றதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்.

உங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு தீர்ப்பு வந்துள்ளது. இது வளர்ச்சிக்காக மக்கள் அளித்த தீர்ப்பு. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories