சங்கரன்கோவில் பகுதியில் பெய்த கனமழை ஆலயத்திற்குள் புகுந்த மழை நீர் பக்தர்கள்அவதி.தரிசனம்

by Staff / 09-09-2025 09:10:24pm
சங்கரன்கோவில் பகுதியில் பெய்த கனமழை ஆலயத்திற்குள் புகுந்த மழை நீர் பக்தர்கள்அவதி.தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இடிமின்னலொடு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  கனமழை பெய்தது.இந்தமழையின் காரணமாக சங்கரன்கோவில் வட்டாரப் பகுதி முழுவதும் குளிர்ந்த நிலை காணப்பட்டது. மேலும் இன்று மாலையிலிருந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சங்கரன்கோவில் பகுதியில் பெய்த கனமழையினால் மிகவும் பிரசித்த பெற்ற சங்கரநாராயணர் கோமதியம்ம்பாள் திருக்கோவில் வளாகம் மற்றும் உட்பிரகாரம் வளாகம் முழுவதும் மழை நீர்  புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் மழை தண்ணீரில் பக்தர்கள் நின்றபடி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். ஒவ்வொரு முறையும் கன மழை பெய்யும் பொழுது சங்கரநாராயணர் கோமதியம்பாள்  திருக்கோயில் வளாகத்திற்குள் மழை தண்ணீர் புகுந்துவருவது வழக்கமாக இருந்துவருகிறது.மேலும் சங்கரநாராயணர்  திருக்கோவில் வளாகத்திற்குள் புகுந்த மழை தண்ணீரை கோவில் வளாக ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கு சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை தண்ணீர் செல்ல இடமில்லாமல் சாலைகளில்  தேங்கி கிடக்கும் நிலை உள்ளது.

 

Tags : சங்கரன்கோவில் பகுதியில் பெய்த கனமழை ஆலயத்திற்குள் புகுந்த மழை நீர் பக்தர்கள்அவதி.தரிசனம்

Share via