மின்னல் தாக்கி லாரி ஓட்டுநர் பலி.

by Staff / 09-09-2025 09:16:14pm
மின்னல் தாக்கி லாரி ஓட்டுநர் பலி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது சங்கரன்கோவில், குருவிகுளம்உள்ளிட்ட பகுதிகளில்  அதிகப்படியாக மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற பொழுது சிமெண்ட் மூடைகள் நனைந்து விடக்கூடாது என்பதற்காக தார்பாயை வைத்து மூடச் சென்ற லாரி ஓட்டுநர் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த சேகர் (60) என்பவர்   கனமழையும் இடி மின்னலையும்  பொருட்படுத்தாமல் லாரியின் மேலே ஏறி சென்று தார்ப்பாயை வைத்து மூட சென்ற பொழுது அவர் மீது மின்னல் தாக்கியதில்  சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : மின்னல் தாக்கி லாரி ஓட்டுநர் பலி.

Share via