"அன்புச் சோலை" மையங்களை  முதலமைச்சர்  தொடங்கி வைத்த்தாா்.-தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 10-11-2025 05:09:44pm


 தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்றுள்ளார். 

திருச்சி பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக "அன்புச் சோலை" மையங்களை  முதலமைச்சர்  தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை வழங்கினார். 

அன்புச் சோலை எனும் முதியோர்களுக்கான  உடல் சோர்வு, மனச்சோர்வு அடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டினரால் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருந்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் விதமாக மதிய உணவும், மாலை சிற்றுண்டி வழங்கி அவர்களுக்கு மனம் உடல் சார்ந்த பிரச்சனைகள் தோன்றா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் 25 அன்புச் சோலை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 
திருச்சி ,சேலம் ,திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கோவை, தஞ்சாவூர், ஆகிய மாநகராட்சி 2 மையங்களும் சென்னை, விருகம்பாக்கம், சோளிங்கர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒரு மையம் விதம் அமைக்கப்பட உள்ளது ,இதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது, அன்பு சோலை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உதவும் பொருட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை செய்ய உள்ளன.,

 பின்னர் இத்திட்டம் தமிழகம் எங்கும் விரிவுபடுத்தப்படும்

 

Tags :

Share via