5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5 ஆயிரத்து 399 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரையோர பகுதிகள் வசிக்கும் பொதுமக்கள் யாரும் கரை கடக்கவோ ஆற்றில் குளிக்கவும் வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :