ஏடிஜிபி சஸ்பெண்ட் வாபஸ் இல்லை - தமிழக அரசு

by Editor / 19-06-2025 12:33:26pm
ஏடிஜிபி சஸ்பெண்ட் வாபஸ் இல்லை - தமிழக அரசு

சிறுவனை கடத்திய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான நடவடிக்கை வாபஸ் இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர வேண்டும் என்று அரசு தரப்பில் கூறியதோடு, பணியிடை நீக்கம் செய்த ஆவணங்களையும் தாக்கல் செய்திருக்கிறது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அவரை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்தது. அதை திரும்ப பெறுவது குறித்த அரசின் முடிவை கேட்டு தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via