இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வின் போது செல்போனை பயன்படுத்தி மோசடி
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வின் போது செல்போனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக சிவகிரியைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் [ 23] மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் தேர்வு அறையில் இருந்து வினாத்தாளை செல்போன் மூலம் படம் பிடித்து வெளியே அனுப்பி... வெளியில் இருந்த பெண் ஒருவர் வினாக்களுக்கான விடைகளை தேடி மீண்டும் அவரது செல்போனிற்கு அனுப்பி உள்ளார். இதனை தேர்வு மைய அதிகாரிகள் கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் அனுப்ப... போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் கோபி கிருஷ்ணன் ,பாண்டியராஜன் மற்றும் மல்லிகா என்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.. இம் மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















