மாநில அரசிடம் ஒப்புதல் பெறாமலே தமிழகத்தில் ஏழு இடங்களில் கனிம வள சுரங்கம் -துரை வைகோ குற்றச்சாட்டு.

by Editor / 03-12-2023 10:06:28pm
மாநில அரசிடம் ஒப்புதல் பெறாமலே தமிழகத்தில் ஏழு இடங்களில் கனிம வள சுரங்கம் -துரை வைகோ குற்றச்சாட்டு.

மாநில அரசிடம் ஒப்புதல் பெறாமலே தமிழகத்தில் ஏழு இடங்களில் கனிம வள சுரங்கம் அமைக்கும் பணிக்கான ஏலத்திற்கான டெண்டர் அறிவிப்பு விளம்பரம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ குற்றச்சாட்டு.


தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:
சமீபத்தில் சில நாளேடுகளில் ஒன்றிய அரசின் விளம்பரத்தில் இந்தியா முழுவதும் சுரங்கத் துறை அமைச்சகம் மூலம் ஒன்றிய அரசு பார்க்கால முக்கிய கனிமங்கள் குறித்து ஆய்வு செய்து தமிழகத்தில் ஏழு இடங்களில் முக்கிய கனிமங்கள் இருப்பதாகவும் அதை சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான இணையவழி மூலம் ஏலம் குறித்த டெண்டர் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும்.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியத்தைச் சார்ந்த குறிஞ்சான் குளம் கிராமத்தில் கிராபைட் சுரங்கம் அமைப்பதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் 20 சுரங்கங்களை அமைப்பதற்கான திட்டம் உள்ளதாகவும்.

இந்த சுரங்கம் அமைக்கும் திட்டத்தை குறித்து ஊர் மக்களிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் மாநில அரசிடமும் எந்த  ஒரு கலந்துரையாடலும் இல்லாமல் டெண்டர் குறித்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களிடம் ஒப்புதல் வாங்கிய பின்னே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறைந்தபட்சம் தமிழக அரசிடம், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் வாங்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக செயல்படுத்தும் இந்தத் திட்டத்தை கடுமையாக கண்டிப்பதாக கூறினார்.

குறிஞ்சான்குளம் மட்டுமன்றி சுரங்கம் அமக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் 7 இட மக்களுக்காகவும் தான் பேசுவதாகவும்  முக்கிய நாளேடுகளில் இந்த விளம்பரம் வந்தும் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுகுறித்து பேசவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தலைவர் வைகோ தான் முக்கிய காரணம் என்றும் தேனி மாவட்டம் நியூட்ரினோ ஆலையை நீதிமன்றம் மூலம் மூடவைத்ததும் அவர் தான் என்று கூறிய அவர் மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டமாக இருந்தால் கண்டிப்பாக அதை மதிமுக எதிர்க்கும் என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சுட்டிக்காட்டினார்.

 

Tags : துரை வைகோ குற்றச்சாட்டு.

Share via