இன்று பெய்த மழையால் சென்னை குளிர்ச்சி அடைந்தது

பல நாட்களாக வெயில், கொடுமையாக தாக்கிக் கொண்டிருந்த சூழலில், இன்று பெய்த மழையால், சென்னை குளிர்ச்சி அடைந்தது .எக்மோர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், வேப்பேரி, அண்ணா சாலை ,அண்ணா நக,ர் தி..நக,ர் சூளைமேடு போன்ற பகுதிகளில் லேசான தூறலுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகர் பகுதியான பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூா் கூட்ரோடு போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது . இந்தக் கோடையில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வந்ததோடு பல்வேறு இடங்களில் வாழை போன்ற பயிர்களை மழையோடு கூடிய காற்று சேதப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags :