சிறார் குற்றவாளிகளை நாம் தடுத்து நிறுத்தி விட முடியும்

by Admin / 20-08-2023 09:49:31am
சிறார் குற்றவாளிகளை நாம் தடுத்து நிறுத்தி விட முடியும்

சிறார்கள் வாலிபர்களையும் நன்னடத்தை உள்ளவர்களாக- கல்வியில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடப்பாடு சமூகத்திற்கு இருக்கின்றது.

சமீப காலமாக தமிழகத்தில் எந்த ஒரு குற்ற நிகழ்விலும் 17 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் இடம் பிடித்திருப்பது வேதனையாக இருக்கின்றது .

தென் மாநிலங்களில் அதிகமான சிறார் குற்றவாளிகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் சிறார் குற்றவாளிகள் அதிகரித்து இருக்கின்ற நிலை உள்ளது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில்.போதைப் பொருள் சரளமாக கிடைப்பதாகவும்  சிறார்கள், வாலிபர்கள் அதிகமாக இந்த போதைகளுக்கு ஆட்படக்கூடிய நிலை உருவாகிறது. பல புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்ற இடங்களில் மொட்டை மாடிகளில் சிறார்கள் ,இளைஞர்களும் கஞ்சா- மது போன்ற பழக்கத்திற்கு ஆட்பட்டு மயங்கி கிடக்கிறார்கள் என்கிற தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. 

அரசு பல உன்னதமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் சிறார்கள் மீதும் இளைஞர்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்டினால் ஒரு நல்ல தமிழகத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை துளிர்க்கிறது . பள்ளி- கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தொகை வழங்குவது போன்று, இலவச பேருந்தில் செல்வது போன்ற சலுகைகளை ...ஏன் மாணவர்களுக்கு அரசு வழங்கக் கூடாது .படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்ற இளைஞர்கள் கையில் காசு இல்லாமல் தவறான பழக்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டு இருக்கிறது.

கிராமப்புறங்களில் இருந்து நகரத்தை நோக்கி வந்த  மாணவர்கள் படிப்போடு சேர்ந்து மாலை நேரங்களில் வேலைக்கு செல்கின்ற நிலை காணப்படுகிறது. ஆனால், கிராமம் சார்ந்து இருக்கின்ற பகுதிகளில் வேலைவாய்ப்பு இன்மையின் காரணமாக இது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொண்டு சம்பாதிக்கின்ற நிலை இல்லாமல் இருக்கின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் மாதம் தோறும் அவர்களுக்கு ஏதாவது ஒரு தொகை வழங்கக் கூடிய ஒரு திட்டம் வகுக்கப்பட்டால், தமிழகத்தில் அதிகரித்து வரக்கூடிய இந்த சிறார் குற்றவாளிகளை நாம் தடுத்து நிறுத்தி விட முடியும். அரசு பல நல்ல திட்டங்களை செய்கின்ற பொழுது எதிர்காலத்தினுடைய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய சிறார்கள்- வாலிபர்களினுடைய போக்குகள் மீதும் நாம் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று .இந்தியாவினுடைய பலமே இளைஞர் சக்தியில் தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது .அதனால் அதிக இளைஞர்களை கொண்ட இந்திய -தமிழகத்தில் இளைஞர்களுக்கு என்று சில சலுகைகளை சில திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது

. வெளிநாடு செல்கின்ற இளைஞர்கள் தங்களுடைய படிப்பு செலவிற்கு,தங்களுடைய தங்கும் வசதிகளுக்கான செலவுகளை, எல்லாம் பார்டைம் வேலை மூலமாக, அவர்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து, தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிலை இன்றும் தொடர்கிறது, ஏன்.. இது போன்ற ஒரு நிலையை தமிழக 17 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற ,வாலிபர்களுக்கும் ஏன் நாம் ஒரு நிலையை உருவாக்காமல்.. இல்ல ...உருவாக்க முயற்சிக்காமல், ஏன்.... நாம் வழிகாண படாமல் இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் இது.

பெண்களுடைய முன்னேற்றம் ஒரு பக்கம் தேவை தான் என்றாலும் மறுபக்கத்தில் இளைஞர்கள் தவறான வழிகாட்டுதலின் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

இளைய தலைமுறைகளில்ஆண்  என்றும் பெண் என்றும் நாம் பேதமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை ஒரு நல்ல சமுதாயம் உருவாக ஆண் -பெண் இருவர்களும் சமமான நிலையில் சமமான வாழ்க்கை தரத்தை அடைய வேண்டும், எனில்,இருவருக்கும் சமமான வாய்ப்புகளை சமூகம் வழங்க வேண்டும்.

சரியான வருமானம் இன்றி இருக்கக்கூடிய குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறார்களும் இளைஞர்களும் தவறான பழக்கத்தை நாட வேண்டிய சூழ்நிலை. இயல்பாகவே அமைந்துவிடும். மனவிரக்கி, வேலையின்மை, வீட்டுக்குள் இருக்கும் பொருளாதார சிக்கல்கள் அனைத்தையும் ஒர் இளைஞனை, ஒரு சிறுவனை குற்றச் செயல் புரிவதற்கு தூண்டுகிறது.

திரையரங்கு கேளிக்கைகள், உணவு விடுதிகள் என  செலவழிக்க காசு இல்லாத ஆசைப்பட்டிருக்கின்ற சிறார்களும் -வாலிபர்களும் பணத்தை தருகிறோம், செய்து விடு, என்று சொல்லுகின்ற, ஏதோ ஒரு நிழல் உலகத்தின் சக்திகளின் கைகளில் அகப்பட்டு தங்களுடைய வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள். இழப்பார்கள். ஆகவே, அரசாங்கம் சிறார்கள் மீதும் வாலிபர்கள் மீதும் அக்கறை செலுத்தி அவர்களுக்கும் பல சலுகைகளை வழங்க வேண்டும் என்பதுதான் எதிர்கால தமிழகத்தை வலிமையானதாக மாற்றுவதற்கு அடித்தளமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

 

 

Tags :

Share via