கன்னடப்படத்தில் ஒரே ஸீன் நடித்த பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது ஒரு சினிமா படத்தில் நடிச்சு முடிச்சிட்டாராம்.
2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் கன்னட மொழியில் படமாக்கப்படுகிறது. அரபி என்ற பெயரில் தயாராகி உள்ளகன்னட திரைப்படத்தில் விஸ்வாஸுக்கு பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க அண்ணாமலையை அணுகியதாகவும், இயக்குநர் கூறிய கதையை கேட்டதும் அண்ணாமலைக்கு ரொம்பவே பிடிச்சு போயிட்டதாம். நடிக்க உடனே ஓகே சொல்லி விட்டாராம். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரபி படத்தின் டீஸர் ஒத்திவைக்கப்பட்டிருக்குதாம்.
Tags : BJP leader Annamalai who acted in only one scene in Kannada film