வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சின்னம் முடக்கம் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

by Admin / 20-02-2022 01:04:56pm
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சின்னம் முடக்கம் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பற்றி மக்களிடம் தெரிவிக்கவே அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன.

கட்சிகளின் எண்ணம், கொள்கைகளை தேர்தல் அறிக்கைகள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். 

ஆனால், வாக்காளர்களை கவர்வதற்காக நிறைவேற்றவே முடியாத பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கட்சிகள் தெரிவிக்கின்றன.

ஆட்சிக்கு வந்த பின், தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளை, சம்பந்தப்பட்ட கட்சி மறந்துவிடுகிறது. டெல்லியில், 2015ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல்களில், தங்களது தேர்தல் அறிக்கையில், '

 
ஜன் லோக்பால் மசோதா கொண்டு வருவோம் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் ஆம் ஆத்மி அரசு எடுக்கவில்லை. டெல்லியில் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் இதேபோல தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்றுவதுஇல்லை. 

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க, தன் தேர்தல் அறிக்கைகளில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்' என தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லை.

தேர்தல் அறிக்கைகளை முறைப்படுத்தாததும், அதில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்சிகளை பொறுப்பேற்க வைக்காததும் தான் இதற்கு காரணம். 

அதனால், தேர்தல் அறிக்கைகளை முறைப்படுத்தவும், வாக்குறுதிகளுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் பொறுப்பேற்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

ஆட்சிக்கு வந்த பின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சியின் சின்னம் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via