பல பெண்களுடன் தொடர்பு.. 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

by Editor / 28-07-2025 01:00:25pm
பல பெண்களுடன் தொடர்பு.. 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திண்டுக்கல்லில் உள்ள பழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் பார்த்திபன், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டார். பார்த்திபனின் செல்ஃபோனில் ஆபாச புகைப்படங்கள் இருப்பதை கண்ட அவரது மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் பார்த்திபனின் குடும்பத்தினர் அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் மனைவி அளித்த புகாரில், பார்த்திபன் மற்றும் அவரது தாயை 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via