கடலில் விழுந்த விமானம்.. 3 பேர் பலி

அமெரிக்கா: சான் கார்லோஸ் விமான நிலையத்திலிருந்து 3 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் பசிபிக் குரோவ் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் கடலில் அடித்து வரப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மீட்புப்படையினர் மாயமான 3 பயணிகளை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் சடலமாக மீட்டனர், இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :