மனைவியை கொலை செய்து மூட்டை கட்டி வீசிய கணவன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர். பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(32) இவரது மனைவி கௌசல்யா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு மனைவி கௌசல்யா மீது கணவன் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வீட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த கணவன் மனைவி மீது கல்லை தூக்கிப் போட்டும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். தொடர்ந்து மனைவியை மூட்டையில் கட்டி கிணற்றில் தூக்கி வீசிவிட்டு மனைவியை காணவில்லை என பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையின் விசாரணையில் கணவனே, மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து கோவை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் சக்திவேலுக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Tags :