164 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு.

by Editor / 21-05-2024 12:02:07am
164 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு.

தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) வாயிலாக தொடங்கியது. விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 164 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு.

Share via