உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது முதியவர் சிக்கினார். பாலியல் தொழில் செய்த நதியா கைது.

by Editor / 21-05-2024 12:10:00am
 உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது முதியவர் சிக்கினார். பாலியல் தொழில் செய்த நதியா கைது.

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் ஜெய்நகர் 2-வது தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) என்ற முதியவர் சிக்கினார். விசாரணையில் அவர், சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபசார பெண் தரகர் நதியா(37) தான் சிறுமியை அனுப்பி வைத்தார் என கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்களை ஆசை வார்த்தை கூறி விபசார தொழிலில் ஈடுத்தியது தெரியவந்தது. இதில் மாணவிகளும் அடங்குவர். இந்நிலையில் அவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : 70 வயது முதியவர் சிக்கினார்.

Share via