சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அவசரகால ஒத்திகை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அவசரகால ஒத்திகை நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,மக்கள்நல்வாழ்வுத் துறை செயலாளர் பங்கேற்றனர்.படுக்கை வசதி,மருந்துகள் இருப்பு,ஆக்ஜிசன் வசதிகள் குறித்து ஆய்வுசெய்தார் .அந்தந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனைகளை ஆய்வு செய்யவேண்டுமென்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து கையிருப்பு உள்ளதா என ஆய்வு செய்து 24 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் இரண்டாம் அலையில அனுமதி அளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையும் தயார்நிலையில் வைக்க முயற்சி மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டதாகவும் தமிழகத்தில்இதுவரை9 பேர் மட்டும் கொரோனா பாதிப்பு அடைந்ததாகவும் தமிழகத்தில் 51 பேர் பாதிப்பு சிகிச்சை மேற்கொண்டுவருவதாகத்தெரிவித்தார்.சீனா,ஜப்பான்,கொரியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வந்த 500 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் செய்யப்பட்டதாகவும்தெரிவித்தார். 1.75.291 மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளதாகவும் இதிகொரோனா படுக்கை வசதி 1,16,471 உள்ளதாகவும் ஆக்ஜிசன் வசதி 68,624 உள்ளதாகவும் .இரண்டாம்அலையின் போது பின் பற்றப்பட்ட முறைகளே இப்பொழுதும் கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Tags :