அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த திண்டிவனம் நகர முன்னாள் திமுக செயலாளர் கபிலன், தற்போது நகர செயலாளராக இருக்கும் ஆசிரியர் கண்ணனிடம் என்னை ஏன் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. இது உங்கள் வீட்டு கட்சியா என அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையிலேயே சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் அமைச்சர் கண் முன்னே இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் நிறைவடைந்ததும் மீண்டும் அமைச்சர் தனது பேச்சை தொடங்கிய போது அங்கு வந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கழகம் முன்னோடிகளுக்கு பதவி தராமல் புதிதாக கட்சியில் வந்த சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலர் சீட்டும் பதவியும் வாரி வாரி வழங்கினார்கள். திண்டிவனம் மேம்பாலம் கீழ் புதுவை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை யாரோ ஒரு அண்ணாச்சிக்கு மட்டுமே கடையை வழங்கி உள்ளீர்கள் திமுகவினருக்கு யாருக்கும் வழங்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவரைத் தொடர்ந்து நகரப் பொருளாளர் சின்ன ராஜேந்திரன் நான் 30 லட்சம் செலவு செய்து என் மனைவியை கவுன்சிலராக ஆகி உள்ளேன் எனக்கு இதுவரையில் நகராட்சி வேலை யாரும் தருவதில்லை கட்சி சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ்களும் என் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆவின் பால்வளத் துறை மாவட்ட இயக்குனர் பதவி கட்சிக்கு சம்பந்தம் இல்லாத கட்சிக்கு புதியதாக வந்த ஒரு ஆளுக்கு உங்களுக்கு வேண்டிய பட்ட நபர் என்பதற்காக பொறுப்பு வழங்கி உள்ளீர்கள் என கவுன்சிலர்கள் மாறி, மாறி கேள்வி எழுப்பினர்
திமுக கவுன்சிலர்கள் ஒன்றும் பின் ஒன்றாக பல குற்றச்சாட்டுகள் அடுக்கிய நிலையில் அமைச்சரால் பதில் சொல்ல முடியாமல் செயல் வீரர்கள் கூட்டம் இத்துடன் முடிகிறது என பேசி தனது உரையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவு செய்தார். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி அமைச்சர் முன்னிலையில் திமுகவினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் திமுக செயல்வீரர்கள் கூட்டமே வாக்குவாத கூட்டமாக மாறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார், கூட்டரங்கிற்குள் வந்த போது திடீரென திமுகவினர் போலீசாரை மடக்கி தடுத்து நிறுத்தி நீங்கள் உள்ளே வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை வெளியேறினர்.
Tags :