மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 1.5 லட்சம் கோடி முதலீடு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா இன்று டிசம்பர் 9 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு, சத்யா நாதெள்ளா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின்-ஏ.ஐ முதன்மை எதிர்காலத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இது ஆசியாவில் மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒற்றை முதலீடு ஆகும்.இந்த நிதி, இந்தியாவில் ஏ.ஐ உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் இறையாண்மைத் திறன்களை உருவாக்குவதற்காக 2026 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தப்படும். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஏ.ஐ யைபொறுத்தவரை, உலகம் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது என்றும், இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை உலகளாவிய நன்மைக்காகப் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags :


















