தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடிகர் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை

by Staff / 22-10-2022 04:29:10pm
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடிகர் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை

சென்னை, அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில், "தமிழ் மொழியை திமுக அரசு வளர்க்கவில்லை .தாய் மொழியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது .காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி திணிப்பு நடைபெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை. ரஜினிகாந்த் பற்றி ஆணையம் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்" என தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories