விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கிரிநகரில் கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும்போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கிரிநகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கி மோசஸ், தேவன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :
















.jpg)


