இயந்திர கண்காட்சியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பார்வையிட்டார்.

ஆவடியில் 2வது நாளாக நடைபெற்று வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் இயந்திர கண்காட்சியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பார்வையிட்டார்.
சென்னையை அடுத்த ஆவடி டேங்க் பேக்டரி படைத்துறை உடைத் தொழிற்சாலை ஆகியவற்றின் சார்பில் ராணுவ தளவாட கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை நடக்கிறது.
இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத தலைக்கவசம், குண்டு துளைக்காத ஜாக்கெட், பாராசூட்,டெண்ட்,அஜயா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன பீரங்கிகள், கியர்பாக்ஸ், இன்ஜின்கள்,டிராக் வீல்கள் போன்ற பீரங்கிகளின் உதிரி பாகங்கள் ஆகியவற்றையும் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

Tags :