மாணவர்களின் உயிரோடு விளையாடும் மினி பேருந்துகள்.
ஆலங்குளத்தில் இருந்து நல்லூருக்கு மினி பேருந்து வசதி உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் 2000 க்கும் மேற்பட்டவர் ஆலங்குளத்தில் இருந்து நல்லூருக்கு மினி பேரூந்தை பயன்படுத்தி வருகின்றனர். அரசு பேரூந்து இல்லாத காரணத்தால் மினி பேரூந்து காலில் மட்டும் தனியார் கல்லூரியில் 1500 மாணவ,மாணவ,மாணவியர்கள்,என சுமார் ஆயிரம் பேர் இந்த மினி பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த தடத்தில் இயக்குவதில் ஒட்டுநர்களுக்கு இடையே கடும் போட்டியும் , மோதலும் அவ்வப்போது ஏற்படுகிறது. நேருக்கு நேர் மோதுவது போல செல்வது, அளவிற்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றி செல்வது , ஊருக்குள் அதிவேகமாக தாறுமாறாக ஒட்டுவது என மினி பேருந்து அட்டகாசம் ஆலங்குளம் பகுதியில் அதிகரித்துள்ளது. தற்போது அது போல அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேரூந்தை இயக்காமல் அவர்கள் விருப்பம் நேரத்திற்கு இயக்குவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.இந்த தடத்தில் ஆலங்குளம் நல்லூருக்கு ஒரு மினி பேருந்துக்கு மட்டும் அனுமதி உள்ள நிலையில் மற்ற இரண்டு மணி பேரூந்துக்களுக்கு ஆலங்குளம்-அய்யனார் குளம், ஆலங்குளம்-மருதப்பாபுரம் ஆகிய தடங்களுக்கு அனுமதி பெற்றுவிட்டு இந்த 2 மினி பேருந்துக்களும் மருதப்பபாரம்-மற்றும் அய்யனார்குளம் செல்லாமல் நல்லுருடன் திரும்பி விடுகிறது. 28ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மினி பேரூந்து இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் நடத்துநர் ஒருவர் கம்பியுடன் வந்து ஒரு மினி பஸ் கண்ணாடி உடைக்கும் சி.சி.டி.வி.வீடியோ காட்சிகள் வைரலாக பரவி யதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வண்ணம் பொது இடத்தில் ஆயுதம் கொண்டு தனியார் பேரூந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்த ஆலங்குளத்தை சேர்ந்த நடத்துநர் செல்வம் என்பவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் ஆலங்குளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே சமயம் அரசு பேருந்து இயக்கம் கொரோனா பெருந்தொற்றுக்குப்பின்னர் இயக்கப்படாததால்தான் மினி பேரூந்துக்களில் மாணவ,மாணவியர்கள் அச்சத்தோடு பயணிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
Tags : மாணவர்களின் உயிரோடு விளையாடும் மினி பேருந்துகள்.