குபு..குபுவென தம்கட்டி தம்மடித்த பெண்கள்..

by Editor / 18-01-2022 06:15:56pm
குபு..குபுவென தம்கட்டி தம்மடித்த பெண்கள்..


தமிழர்களின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பண்டிகையாக விளங்குவது நம் பொங்கல் பண்டிகை திருநாள்.இந்த திருநாளுக்காக ஏங்குவது இளம் தலைமுறைகள் அந்தளவுக்கு தொடர் விடுமுறைநாட்களை அள்ளித்தரும் பண்டிகை.இந்த பண்டிகை நாட்களில்  தமிழர் கலைகளை பறைசாற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்,  பல்வேறு பகுதிகளில் கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வருகின்றன இந்தநிலையில் பெண்களுக்காக பல்வேறு போட்டிகள் தென்மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றது அதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் மற்றும் மனைவியை சுமந்து செல்லும் கணவன் ஓட்டப்பந்தய போட்டிகள் என பல்வேறு ருசிகரமான போட்டிகள் நடைபெற்ற நிலையில்  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட. விளையாட்டு போட்டியில்  காண்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல வித்தியாசமான போட்டிகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில்,  ஆண்களுக்கு பச்சை காய்கறிகளை உண்ணும் போட்டியும், பெண்களுக்கு பீடி புகைக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் , மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பீடியை புகைத்து தள்ளினர்.இணையத்தில் வைரலாகி வரும் இந்த காட்சி, காண்போரிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல விதங்களில் முன்னேறி வருவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், இதுபோன்ற உதாரணங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது எனவும், சமூக கலாச்சார சீரழிவுகள் எதிர்கொள்ளும் விதமாக மேலைநாட்டு கலாச்சாரத்தை பரப்பும் விதமாக தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கும்வண்ணம் ஆண்கள் உற்சாகப்படுத்தி  பெண்கள் புகைப்பிடிக்கும் போட்டி சிறுவர் சிறுமிகளுக்கு அந்த பழக்கத்தை ஊக்கப்படுத்த விதமாகவுஅமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via