திருப்பதி அருகே சாலையில், கார் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு.

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி அருகே உள்ள லீலா மஹால் - கரகம்பாடி சாலையில், கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் தீ பற்றி எரிந்ததைப் பார்த்த ஓட்டுநர் அஜந்தா உடனடியாக காரை விட்டு கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விசாரணையில், சரியான பராமரிப்பு இல்லாததே தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
Tags : திருப்பதி அருகே சாலையில், கார் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு.