3 சிறுவர்கள் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிய .. அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள மதுபான கடையில், 3 சிறுவர்கள் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற சட்டம் இருந்தும் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம் வயதில் மது பழக்கத்தில் சிக்கி, பல சிறுவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மதுபான கடைகளும், அதிகாரிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags :



















