ஜூன் மாத இறுதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் கூடுதலாக ரூ.1,000 அபராதம்

ஜூன் மாத இறுதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. ஜூன் 30க்குப் பிறகு, பான் ஆதாருடன் இணைக்க கூடுதலாக ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்.
செய்திக்குறிப்பின்படி, வரி செலுத்துவோர் ஏப்ரல் 1, 2022 முதல் மூன்று மாதங்களுக்கு ரூ. 500 செலுத்த வேண்டும், பின்னர் பான் மற்றும் ஆதாரை இணைக்க ரூ.1,000 செலுத்த வேண்டும்.
முன்னதாக, மார்ச் 31, 2023க்குள் பான் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், ஏப்ரல் 1, 2023 முதல் கார்டு செயலிழந்துவிடும் என்று வரித்துறை கூறியிருந்தது.
பான் எண் முடக்கப்பட்டிருந்தால், உங்களால் வருமான வரி செலுத்தவோ, வங்கிக் கணக்கு தொடங்கவோ, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யவோ முடியாது.
Tags : Failure to link the ban card with the support by the end of June carries an additional fine of Rs 1,000