நாங்கள் 32 ஆண்டு, திமுக 25 ஆண்டு; ஆர்.பி. உதயகுமார் போடும் வித்தியாசமான கணக்கு.

by Editor / 05-03-2025 09:22:12pm
நாங்கள் 32 ஆண்டு, திமுக 25 ஆண்டு; ஆர்.பி. உதயகுமார் போடும் வித்தியாசமான கணக்கு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணா முரளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் கூறுகையில், நாடாளுமன்ற தொகுதி வரையறை மட்டும் இல்லாமல் தமிழகத்தின் உரிமைகளை தட்டிப் பறிக்கிற  எந்தவித திட்டங்களாக இருந்தாலும் அதை எதிர்க்கும்  முதல் இயக்கமாக அதிமுக இருக்குத். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த கூட்டணியும் நிரந்தரம் கிடையாது. தேர்தல் கால கூட்டணிகள் உள்ளது. திமுக மீது அனைத்து தரப்பு மக்களும் கொந்தளிப்புடன் உள்ளனர்.  எனவே இந்த வாக்குகளை பெறக்கூடிய வகையில் மதி நுட்பத்துடன் கூட்டணி வகுக்கப்படும். அதிமுகவினுடைய ஓட்டு வாங்கி அப்படியே தான் உள்ளது . அதிமுக ஓட்டு வாங்கி வலுவாக இருப்பதால்தான்  32 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி செய்து உள்ளது.  75 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கும் திமுக 25 ஆண்டு காலம் மட்டுமே ஆட்சி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

 

Tags : நாங்கள் 35 ஆண்டு, திமுக 25 ஆண்டு; ஆர்.பி. உதயகுமார் போடும் வித்தியாசமான கணக்கு

Share via