நாமக்கலில் 13 மருந்து கடைகளின் லைசென்ஸ் ரத்து

சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. அதேபோல் ஒரு சில மெடிக்கல்களில் வலி நிவாரணி மருந்துகள் அதிக அளவு வாங்கப்பட்டு உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.
இதனால் சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள், மொத்த மருந்து கடைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 13 மருந்து கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் கடந்த மூன்று வாரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 13 கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் வலி மாத்திரைகளை போதைக்காக இளைஞர்களுக்கு விற்பனை செய்த மூன்று மருந்து கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
Tags :