ஐதராபாத் விமான நிலையத்தில் 5 கிலோ கொக்கைன் பறிமுதல்

by Staff / 03-09-2023 05:11:27pm
ஐதராபாத் விமான நிலையத்தில் 5 கிலோ கொக்கைன் பறிமுதல்

ஹைதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஐந்து கிலோ எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொக்கைன் போதைப்பொருள் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு டெல்லி செல்லும் பயணி ஒருவரை சந்தேகப்பட்டு அவரிடம் சோதனை செய்த போது கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அந்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்தபோது, அவரது லக்கேஜ் பை மற்றும் பெண்களின் கை பைகளில் 4 கொக்கைன் பாக்கெட்களை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories